"காடு வளர்ப்பும் காட்டுயிர் பாதுகாப்பும்" விழிப்புணர்வு பயிற்சி முகாம்h
"காடு வளர்ப்பும் காட்டுயிர் பாதுகாப்பும்" விழிப்புணர்வு பயிற்சி முகாம் இயற்கையை நேசி பொது நல அறக்கட்டளை சார்பில், 26/11/2022, சனிக்கிழமை அன்று, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் " காடு வளர்ப்பும் காட்டுயிர் பாதுகாப்பும்" என்ற தலைப்பில் விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா M. கமலக்கண்ணன் அனைவரையும் வரவேற்றார். அறக்கட்டளையின் செயல்பாடுகளை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வது பற்றி விளக்கினார்.நிர்வாக அறங்காவலர் திரு M. வெற்றிவேல் தனது தலைமை உரையில் அறக்கட்டளையின் வளர்ச்சி மற்றும் உறுதுணையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.வனச்சரக அலுவலர் திரு. பாஸ்கர் மாசுக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி பேசினார். சிறப்பு அழைப்பாளர் திரு. J. பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி காடுகளின் அவசியம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்பு பற்றி காணொளி காட்சிகள் மூலம் விளக்கம் அளித்தார். இதில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல், அறங்காவலர்கள் கவிதா, முருகானந்தம், தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா.கமலக்கண்ணன் மற்றும் பொறுப்பாளர்கள் மகேந்திரன், மோகன்ராஜ், சுந்தரவடிவேல், சீனிவாசபிரபு, முத்தாள், வளர்மதி, ரவிச்சந்திரன், கிஷோர்குமார், தேவா, உசேன் மற்றும் உறுப்பினர்கள் கார்த்திக், கார்த்திகா கலந்துகொண்டனர். இரண்டாம் கட்ட பயிற்சியில் அரிமா கமலக்கண்ணன் உறுப்பினர்களுக்கு மனநிலை மாற்றம், தன்னிலை மேம்பாடு பற்றி பயிற்சி அளித்தார். உறுப்பினர்களின் காடுகள் மற்றும் வன விலங்குகள் பற்றிய சந்தேகங்களுக்கு திரு. பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி தகுந்த விளக்கம் அளித்தார். முடிவில் அறக்கட்டளையின் உறுப்பினர் திரு சீனிவாச பிரபு நன்றி கூறினார்.