Project Details
2023-03-30

பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" வைப்பு

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் "பறவைகளின் பசி- தாகம்" தீர்ப்போம் என்ற திட்டத்தின் மூலம் "தண்ணீர் தானிய தேக்கி" வைப்பு.

பொள்ளாச்சி, மார்ச் .30.,

இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் பொள்ளாச்சி நகரம் முழுவதும் பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம் என்ற திட்டத்தின் மூலம் "தண்ணீர் தானிய தேக்கி" மார்ச் 27 அன்று முதல் அரசு அலுவலகங்களில் உள்ள மரங்களில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா IAS அவர்கள் முன்னிலையில் இத்திட்டம் துவங்கப்பட்டது. சார் ஆட்சியர் தண்ணீர் மற்றும் தானியங்கள் வைத்து அவரது அலுவலகத்தில் துவக்கி வைத்தார்.

இதையடுத்து, பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் அவர்கள் முன்னிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மேலும் காவல் உதவி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் உதவி கண்காணிப்பாளர் பிருந்தா IPS முன்னிலையில் வைக்கப்பட்டது.

இதுபற்றி இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் கூறுகையில், அறக்கட்டளை சார்பில் முதல் கட்டமாக 50 தண்ணீர் தானிய தேக்கிகள் வைக்கப்படுகிறது. அதன் பிறகு படிப்படியாக சுமார் 200 வரையிலான தண்ணீர் தானிய தேக்கிகளை வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கோடைகால வெயிலின் காரணமாக நீர் நிலைகளில் தண்ணீரின்றி வற்றிவருவதன் காரணமாக பறவை இனங்களும் மற்றும் சின்ன சின்ன விலங்குகளும் நீரின்றி இறப்பை சந்திக்க நேரிடுகிறது. அதன் காரணமாக இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையானது பொள்ளாச்சி நகரம் முழுவதும் தண்ணீர் தானிய தேக்கிகள் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இயற்கை ஆர்வலர்கள் மட்டும் இதனைச் செய்தால் போதாது, பொதுமக்களும் வீட்டின் சுற்றுச் சுவர்களில், மொட்டை மாடிகளில், பறவைகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் வையுங்கள். பறவைகளுக்கு மட்டுமல்ல பல்லுயிருக்கும் பேருதவியாக இருக்கும். பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம். பறவைகளை பாதுகாப்போம் என்று கூறினார்.

நிகழ்வில் அறக்கட்டளையின் அறங்காவலர் முருகானந்தம், மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.கமலக்கண்ணன், பழங்குடியின பொறுப்பாளர்கள் முத்தாள், வளர்மதி, உறுப்பினர்கள் தினேஷ்குமார், பாலு, பாலமுரளி கிருஷ்ணனா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Date : 2023-03-30

  • பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" வைப்பு

  • Pollachi

Recent Blogs

  • Visit to the Homes of the Topslip Tribal Dance Group

    2026-03-25


  • World Sparrow Day Awareness Seminar

    2026-03-20


  • Bird Water Bowl Initiative – Courtesy Visit to the Coimbatore District Collector

    2026-03-13


  • Courtesy Visit to the Field Director, Anamalai Tiger Reserve

    2026-03-13


  • Courtesy Visit and Launch of Bird Water Bowl Initiative

    2026-03-13


Footer Logo