Project Details
2023-04-19

பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம் | பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" வைப்பு

பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம் | பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" வைப்பு இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம் என்ற திட்டத்தின் மூலம் "தண்ணீர் தானியை தேக்கி" வைப்பு நிகழ்ச்சி 19-04-2023 இன்று புதன்கிழமை கோயம்புத்தூர் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் திரு.எஸ்.ராமசுப்பிரமணியம் அவர்கள் தொடங்கி வைத்து, மாவட்ட வன அலுவலர் திரு.என்.ஜெயராஜ் அவர்களிடம் "தண்ணீர் தானியை தேக்கி"யை வழங்கினார். பெற்றுக் கொண்ட மாவட்ட வன அலுவலர் திரு.என் ஜெயராஜ் அவர்கள், வனச்சரகர்கள், வனக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கினார். இதுகுறித்து வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் திரு.எஸ்.ராமசுப்பிரமணியம் பேசுகையில், கோடைகால வெயிலின் காரணமாக பறவைகள் மற்றும் அணிகள் போன்றவைகள் நீரின்றி தவிக்கும் என்பதால் தன்னார்வ தொண்டு நிறுவனமான இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையினர் பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" உருவாக்கியது பெரும் மகிழ்ச்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இதனை வனச்சரர்களும், வன குழுவினரும் பெற்றுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். இதில், இயற்கை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் கூறியதாவது ; மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?. உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழவே முடியாது. எனவே, நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" உருவாக்கப்பட்டு பொள்ளாச்சி நகர் முழுவதும் வைக்கப்பட்டது. தற்போது, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் அவர்களிடம் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் இன்று "தண்ணீர் தானிய தேக்கி" வழங்கும் நிகழ்ச்சியை தலைமையேற்று நடத்து கொடுத்தமைக்கு நன்றி. நகர் புறங்களில் உள்ள பொதுமக்கள் தங்களது வீடுகளில் சிறிய கிண்ணத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டுகோள் விடுகிறேன் என்று கூறினார். இதில் உதவி வன பாதுகாவலர் திரு.செந்தில் குமார், கோவை வனச்சரகர் திரு.அருண் குமார், சமூக காடுகள் வனச்சரகர்கள் காரமடை மற்றும் சிறுமுகை வனச்சரகர்கள், சிறுமுகை வனக் குழு உறுப்பினர்கள்,வன உயிரிளாளர்கள் திரு.பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி, திரு.நவீன் மூர்த்தி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திரு.முருகானந்தம், திருமதி. கவிதா, தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.கமலக்கண்ணன், திட்டக்குழு பொறுப்பாளர் திரு.பாலு, பழங்குடியின பொறுப்பாளர் திருமதி.முத்தாள், திருமதி.வளர்மதி, பொள்ளாச்சி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசபிரபு மற்றும் உறுப்பினர்கள் தினேஷ்குமார், கிஷோர்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Date : 2023-04-19

  • பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம் | பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" வைப்புh

  • Coimbatore

Recent Blogs

  • Let's solve the hunger and thirst of the birds "Water grain tank" deposit for birds

    2023-04-19


  • பறவைகளின் பசி தாகம் தீர்ப்போம் | பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" வைப்பு

    2023-04-19


  • "Water grain tank" deposit for birds

    2023-03-30


  • பறவைகளுக்கு "தண்ணீர் தானிய தேக்கி" வைப்பு

    2023-03-30


  • இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் வனம்,வனவிலங்கு பற்றிய விழிப்புணர்வு ஆடியோ வெளியீடு

    2022-10-21


Footer Logo