இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் வனம்,வனவிலங்கு பற்றிய விழிப்புணர்வு ஆடியோ வெளியீடு h
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் வனம்,வனவிலங்கு பற்றிய விழிப்புணர்வு ஆடியோ வெளியீடு இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் வனத்துறை சம்பந்தப்பட்ட சோதனை சாவடிகளில் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்தைப் பற்றியும் வனவிலங்குகள் பற்றியும் புரிதலும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக குரல் பதிவின் மூலம் ஆடியோ வகையில் தமிழ், மலையாளம், ஆங்கிலம் என மூன்று மொழிகளில் ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆடியோவை பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் கே.பார்கவ தேஜா இ.வ.ப., அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அனைத்து சோதனை சாவடிகளிலும் ஒளிபரப்பாபடவுள்ளது. ஆடியோவில் கொடுக்கப்பட்ட கருத்து என்னவென்றால், தமிழ் நாடு வனத்துறை சார்பில் சுற்றுலா பயணிகளை அனுப்புடன் வரவேற்கிறோம். வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை சார்பில் அன்பான வேண்டுகோள் : வால்பாறை மலைப்பாதையில் செல்பவர்கள் போதைப் பொருட்கள், சிகரெட் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய எதையும் எடுத்துச் செல்லாதீர்கள். வனப்பகுதியில் மது அருந்திவிட்டு சிலர் பாட்டில்களை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர். பாட்டில்கள் உடைந்து வனவிலங்குகளின் கால்களில் குத்தி அவைகள் இயற்கையாக உணவுதேட வழியின்றி உயிரிழக்க நேரிடும். பிளாஸ்டிக் பொருட்களை வனவிலங்குகள் சாப்பிடுவதாலும் அவைகள் உயிரிழக்க நேரிடும். அதனால், போதைப்பொருட்களை மலைப்பாதையில் எடுத்து செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. வாட்டர் பாட்டில், குளிர்பான பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து செல்லாதீர்கள். பாலித்தீன் பைகளை கொண்டு சென்று, தின்பண்டங்களை சாப்பிட்டபிறகு அவற்றை வனப் பகுதியிலும் சாலை ஓரங்களிலும் வீசாதீர்கள். இங்கே உள்ள குப்பை தொட்டியில் பிளாஸ்டிக் பொருட்களை போட்டுவிட்டு செல்லுங்கள். சுற்றுலா வாசிகள் மலைப்பாதையில் செல்லும்போது குரங்குகளுக்கு தின்பண்டங்களை ரோடுகளில் வீசாதீர்கள். அதை சாப்பிட குரங்குகள் ரோடுகளில் ஓடுவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்க நேரிடும். வரையாடு கள், குரங்குகள் அருகில் சென்று செல்ஃபி எடுக்காதீர்கள். வனவிலங்குகளை துன்புறுத்துவது 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் பிரகாரம் கடும் தண்டனைக்குரியது. வனம் நமது சொத்து. பாதுகாப்புடன் வைக்க உதவுங்கள். இயற்கை அழகை ரசித்துச் செல்லுங்கள். வருங்கால தலைமுறைக்கு அழகிய வன சொத்தை ரசிக்க வாய்ப்பளியுங்கள் என்று பதிவிடப்பட்டடுள்ளது. இதில், இயற்கை நேசி பொதுநல அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அறங்காவலர் மா வெற்றிவேல் மாநில ஒருங்கிணைப்பாளர் அரிமா.கமலக்கண்ணன், தன்னார்வ குழு தலைவர் சுந்தரவடிவேல், மற்றும் மோகன்ராஜ், பலமுரளிகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்