டாப்சிலிப் மலைவாழ் பள்ளிக்கு இயற்கையை நேசி அறக்கட்டளை உதவிh
டாப்சிலிப் மலைவாழ் பள்ளிக்கு இயற்கையை நேசி அறக்கட்டளை உதவி எங்களது இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் வணக்கங்கள். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட டாப்சிலிப் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் நூலகத்திற்கு 350 புத்தகங்கள், ஸ்டீல் பீரோ, இரண்டு ஸ்டீல் ரேக்குகள் அறக்கட்டளையின் சார்பில் வழங்கப்பட்டது. மலைவாழ் மக்களின் குழந்தைகளின் அறிவை மேலும் வளர்க்கும் விதமாகவும் வாசிப்பு திறமையை வளர்க்கும் நோக்கத்துடனும் இயற்கை, வனவிலங்குகள், கதைகள், புராண கதைகள், அறிவியல், வரலாற்று தகவல்கள், நீர்நிலைகள், விஞ்ஞானம், விடுகதைகள், படத்துடன்கூடிய கதைகள் போன்ற புத்தகங்களை பாதுகாக்கும் வகையில் ஸ்டீல் பீரோ, இரண்டு ஸ்டீல் ரேக்குகள் வழங்கப்பட்டது. மேலும், இந்தப் பள்ளியின் மாணவர்களின் திறமையை வளர்க்கும் நோக்கத்துடன் ஓவிய பயிற்சி, நடன பயிற்சி, விளையாட்டு பயிற்சி, சரளமாக ஆங்கிலம் பேச பயிற்சிகள் அளிக்கவுள்ளோம். அதன்மூலம் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு பொருட்கள் வழங்கி வனத்துறையுடன் இணைந்து பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கிட ஏற்பாடுகள் செய்யவுள்ளோம். அடுத்த ஆண்டு மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளில் இந்தப்பள்ளியின் மாணவர்களை கலந்துகொள்ளச்செய்ய இருக்கிறோம் என்பதை இதன்மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த திட்டத்தை முதல் தன்னார்வலராக முழு ஒத்துழைப்போடு செயலாற்றிய அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா.கமலக்கண்ணன் மற்றும் சில புத்தகங்கள் வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இதில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல், அறங்காவலர்கள் கவிதா, முருகானந்தம், ஆனந்தகுமார், தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா.கமலக்கண்ணன் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகர் சுந்தரவேல், பள்ளியின் ஆசிரியை வனஜா மற்றும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பாலு, சுந்தரவடிவேல், சீனிவாசபிரபு, முத்தாள், வளர்மதி, மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.