இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் டாப்சிலிப் மலை வாழ் மக்கள் பள்ளி மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்h
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் டாப்சிலிப் மலை வாழ் மக்கள் பள்ளி மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் டாப்சிலிப் மலை வாழ் மக்கள் பள்ளி மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் இன்று (09/12/2022), எங்கள் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை குழுவினர், டாப்சிலிப் மலை வாழ் மக்கள் பள்ளி மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தினோம். 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்கள் 13, மாணவிகள் 10, மொத்தம் 23 பேருடன் நடந்த கலந்துரையாடலில் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் வெற்றிவேல், தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா கமலக்கண்ணன், உறுப்பினர்கள் செல்வ மணிகண்டன், புருஷோத்தமன் மற்றும் ஆசிரியை திருமதி வனஜா ஆகியோர் கலந்துகொண்டனர். மாணவர்களின் திறமையை வெளிக்கொணர நடந்த உரையாடலில் அவர்கள் ஓவியம் மற்றும் நடனத்தில் ஆர்வம் காட்டினார். பல்வேறு விளையாட்டுக்களை அவர்கள் முன்வைத்தனர். முடிவில் அவர்கள் திறமையை கபடி மற்றும் வாலிபால் ஆகியவற்றில் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. மேலும் வெற்றிவேல் "மணல் ஓவியத்தில்" பயிற்சி அளிப்பதாகவும், செல்வ மணிகண்டன் "ரங்கோலியில்" பயிற்றுவிக்கவும், அரிமா கமலக்கண்ணன் "சைக்கிள்" மற்றும் "ஆங்கில பேச்சு புலமையில்"பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டது.