இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை நடத்திய h
இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை நடத்திய "காட்டு வளமும், காட்டுயிர் பாதுகாப்பும்" இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் “காட்டு வளமும், காட்டுயிர் பாதுகாப்பும்“ என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களோடு கலந்துரையாடல் 18-11-2022 நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் வனவிலங்குகள் பற்றியும் வனத்தைப் பற்றியும் இயற்கை விவசாயம் குறித்தும் கல்லூரி மாணவர்களிடையே கலந்துரையாடப்பட்டது. இதில் இயற்கையை நேசி பொதுநல அறக்கட்டளையின் சார்பில் அழைக்கப்பட்டு, சிறப்பு விருந்தினராக ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வன உயிரியலாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி அவர்கள் கலந்து கொண்டு, வனத்தையும் வனவிலங்குகள் பற்றியும் சில புகைப்பட ஆதாரங்களோடு மாணவர்களுக்கு விளக்கினார். இதில், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் மா.வெற்றிவேல் பேசுகையில், மனிதர்களால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் துன்புறுத்தல் குறித்தும், வனவிலங்குகளை துன்புறுத்தும் விதமாக செல்ஃபீ எடுக்கவேண்டாம் என்றும், யானைகளையின் பாதுகாப்பு பற்றி விரிவாக பேசினார். இதில், அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரிமா. கமலக்கண்ணன் பேசுகையில், புலிகளை பாதுகாக்க வேண்டும், வனத்துக்குள் போகும் போது பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லவேண்டாம் என்றும், இதனால் வனவிலங்குகளுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரி வளாகத்தில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் மகேந்திரன் ஏற்பாட்டில் மரக்கன்றுகள் நட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது. இதில் பழனி ஸ்ரீ சுப்பிரமணியா பொறியியல் கல்லூரியின் IRS சேர்மன் டாக்டர் ஜாய் சேகர் மற்றும் ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி முதல்வர் டாக்டர் சோமசுந்தரம், கல்லூரியின் என்எஸ்எஸ் சேகர் அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் மகேந்திரன், சுந்தரவடிவேல், ஆகியோர் கலந்து கொண்டனர்.